பார் கவுன்சில் உறுப்பினர்கள், வழக்கறிஞர் சங்கங்கள் அவசர ஆலோசனை

0 1008

வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பார் கவுன்சில் வழக்கறிஞர்கள், கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கங்கள், முன்னாள் நீதிபதிகள் கலந்து கொண்ட அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் வழக்கு விசாரணை நடத்துவதில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்கள், மற்றும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், அரசின் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு உட்பட்டு நீதிமன்றங்களை திறக்க தலைமை நீதிபதி மற்றும் நிர்வாக குழுவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments