சமுத்திர சேது திட்டத்தின் கீழ் கொழும்புவில் இருந்து மீட்கப்படும் இந்தியர்கள்

0 653

 வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை கடல் வழியாக மீட்கும் சமுத்திர சேது திட்டத்தின் கீழ், கொழும்புவில் இருந்து 700 பேர் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்படுகின்றனர். 

வந்தேபாரத் திட்டத்தின் ஒரு அங்கமான சமுத்திர சேது திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக  கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ். ஜலஷ்வா இன்று காலை கொழும்பு துறைமுகம் வந்தடைந்தது.

 கப்பலில் தொற்று பரவாமல் தடுக்க மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு  சிவப்பு மண்டலத்தில் மீட்கப்படும் இந்தியர்களும், ஆரஞ்சு மண்டலத்தில் அவர்களை கவனித்துக் கொள்ளும் மருத்துவ குழுவினரும், பச்சை மண்டலத்தில் கப்பல் பணியாளர்களும் பயணம் செய்வர்.

சமுத்திர சேது திட்டத்தின் முதல் கட்டத்தில் கடந்த 8 மற்றும் 16 ஆம் தேதிகளில் மாலத்தீவுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments