சென்னையில் இன்னும் 2 வாரங்களில் நல்ல மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்

0 3023

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்னும் 2 வாரங்களில் நல்ல மாற்றம் தெரிய ஆரம்பிக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்ப்பேட்டை மண்டல அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றாத சலூன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து தற்போது வரை 60 லட்ச ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments