முதல்வன் திரைப்பட பாணியில் அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு

0 14247
முதல்வன் திரைப்பட பாணியில் அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு

மதுரை பெத்தானியபுரம் நியாய விலைகடையில் ரேசன் அரிசி தரமற்றதாகவும், எடை குறைவதாகவும் அதனை காட்டி பெண் ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து முதல்வன் திரைப்பட பாணியில் நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர் ராஜு ரேஷன் கடை விற்பனையாளரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார்.

பெத்தானியபுரம் பகுதியில் அதிமுக சார்பில் நிவாரண தொகுப்புகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். நிகழ்ச்சி முடிந்தபின் காரில் ஏறி செல்ல முயன்ற அவரை தடுத்த செல்வி என்ற பெண், அந்த பகுதியில் வழங்கப்படும் ரேஷன் அரிசி தரமற்றதாகவும் எடை குறைவாக வழங்கப்படுவதாக புகார் அளித்தார்.

பெண் ஒருவர் ஆதாரத்துடன் புகார் அளித்ததை தொடர்ந்து தனது ஆதரவாளர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் ஏறி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாதா கோவில் பகுதியில் இயங்கிவரும் ரேஷன் கடைக்கு சென்று அமைச்சர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

மாதாகோவில் பகுதி ரேசன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வின் போது உறுதி செய்தார். இதனை அடுத்து உடியாக கடை விற்பனையாளர் தர்மேந்திரனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments