இஸ்ரேலில் தவறுதலாக போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்

0 522

இஸ்ரேலில் போலீசால் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட பாலஸ்தீனரின் இறுதிச் சடங்களில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். தலைநகர் ஜெருசலேமில் ஆயுதம் வைத்திருப்பதாக எண்ணி பாலஸ்தீன இளைஞர் ஒருவரை போலீசார் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.

32 வயதான ஐயாத் கெய்ரி என்ற அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் ஆயுதம் எதுவும் வைத்திருக்கவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

போலீசின் இந்த தவறுதலான நடவடிக்கைக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், ஐயாத் கெய்ரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments