நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேருக்கு கொரோனா உறுதி

0 1208
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 ஆயிரத்து 392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 ஆயிரத்து 392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் இந்த பெருந்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்து 535 ஆக உயர்ந்துள்ளது.

அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் இக்கொடுந்தொற்றுக்கு 230 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்து 394 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 91 ஆயிரத்து 819 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள 93 ஆயிரத்து 322 பேருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாட்டிலேயே அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் இதுவரை 67 ஆயிரத்து 655 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 286 பேர் பலியாகியுள்ளனர்.அதற்கடுத்தபடியாக தமிழகத்தில் 22 ஆயிரத்து 333 பேரும், டெல்லியில் 19 ஆயிரத்து 844 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் 16 ஆயிரத்து 779 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையோ 1,038 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல் மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments