மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

0 1256
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நேற்று வினாடிக்கு 2,389 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 4,159 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பும் உயர்ந்து வருகிறது. அதன்படி, இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.05 அடியாகவும், நீர் இருப்பு 66.208 டி.எம்.சி, யாகவும் உள்ளது.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments