டெல்லி-நொய்டா எல்லையில் போக்குவரத்துக்குத் தடை நீடிப்பு

0 389
டெல்லி-நொய்டா எல்லையில் போக்குவரத்துக்குத் தடை நீடிப்பு

டெல்லி-நொய்டா எல்லைப் பகுதி தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நொய்டா பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42 சதவீதம் பேர் டெல்லியில் இருந்து வந்தவர்கள் என உத்தரப்பிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதித்துள்ள போதும் நொய்டாவின் மாவட்ட நிர்வாகம் தடையை நீட்டித்து ஆணை பிறப்பித்துள்ளது.

எல்லைகளில் போக்குவரத்தை அனுமதிக்கும் பிரச்சினையை மாவட்ட நிர்வாகமே கையாளட்டும் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஆயினும் டெல்லியில் இருந்து ஹரியானா எல்லை தாண்டி செல்வோருக்கு எந்த வித கட்டுப்பாடுகளும் கிடையாது என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments