பல்வேறு தளர்வுகளை அறிவித்தது மம்தா பானர்ஜி அரசு..!

0 1957
பல்வேறு தளர்வுகளை அறிவித்தது மம்தா பானர்ஜி அரசு..!

மேற்கு வங்கம் அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. பெரும்பாலான மக்களின் போக்குவரத்தாகா விளங்கும் கொல்கத்தாவின் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான தடை நீடிக்கிறது.

குறைந்த அளவிற்கு பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்க வேண்டும், அனைத்து பயணிகளும் முகக் கவசம் கையுறைகள் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூர ரயில்கள், வெளிமாநில அரசுப் பேருந்துகள், படகு சேவைகள், ஆட்டோ டாக்சிகள் குறைந்த பயணிகளுடன் இயக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. ஜூன் 8 முதல் அனைத்து அலுவலகங்களும் 70 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வழிபாட்டுத் தலங்களுக்கு இன்று முதல் அனுமதியளிக்கப்பட்ட போதும் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் பத்து பேருக்கு மேல் கூடக் கூடாது என்ற கட்டுப்பாட்டும் விதிக்கப்பட்டுள்ளதுSHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments