மீண்டும் படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளித்தது மகாராஷ்ட்ரா அரசு

0 427
மீண்டும் படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளித்தது மகாராஷ்ட்ரா அரசு

மகாராஷ்ட்ராவின் பாதிப்பு இல்லாத பகுதிகளில் படப்பிடிப்புகளை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மும்பையின் கேட் வே ஆப் இந்தியா (Gateway of India) மரீன் டிரைவ் (Marine Drive) போன்ற பிரசித்தி பெற்ற பகுதிகள் அனைத்து மொழி திரைப்படங்களிலும் காட்சியளிப்பது வழக்கம்.

கொரோனா பாதிப்பால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், திரைப்படத் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கு மட்டும் அரசு அனுமதியளித்திருந்தது. இந்நிலையில், சில நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளுக்கான அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. அதிகமான கூட்டம் சேர்க்கக்கூடாது, திரைப்பட நட்சத்திரங்கள் முதல் தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை மீறினால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்ட்ரா அரசு எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments