டெல்லியில் தொடர்ந்து 4 நாட்களாக ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா

0 357
டெல்லியில் தொடர்ந்து 4 நாட்களாக ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா

டெல்லியில் தொடர்ந்து 4 நாட்களாக நாள்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

டெல்லியில் நேற்று மாலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 295 பேருக்குக் கொரோனா உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை ஒரு நாளில் கண்டறியப்பட்டுள்ள அதிக எண்ணிக்கை இதுவாகும். தொடர்ந்து 4 நாட்களாக நாள்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வியாழனன்று ஆயிரத்து 24 பேரும், வெள்ளியன்று ஆயிரத்து 106 பேரும், சனியன்று ஆயிரத்து 163 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 844ஆக அதிகரித்துள்ளது. எட்டாயிரத்து 478 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். பத்தாயிரத்து 983 பேர் மருத்துவமனைகளிலும், முகாம்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments