கொரோனா பாதிப்பில் 9வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு வந்தது இந்தியா

0 1767

கொரோனா பாதிப்பில் 9 வது இடத்தில் இருந்த இந்தியா உலகின் ஏழாவது இடத்திற்கு வந்துள்ளது.

மே 25ம் தேதி பாதிப்புடைய நாடுகளின் வரிசையில் பத்தாவது இடத்தில் இந்தியா இருந்தது.

அப்போது ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் மே மாதம் முடிவதற்குள் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து பத்தாவது இடத்தில் இருந்து 9 வது இடத்துக்கும் அதிலிருந்து தற்போதைய ஏழாம் இடத்துக்கும் வந்துள்ளது. இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்தை நெருங்குகிறது.

உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துவிட்டது. தொடர்ந்து உலக அளவில் அமெரிக்காவே பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments