ஏர் இந்தியா விமானத்தில் பறப்பதற்கு முன் ஊழியர்களுக்கு சோதனை கட்டாயம்

0 1421

விமானத்தை இயக்குவதற்கு முன் விமானிகளும், விமான பணியாளர்களும் கட்டாயம் கொரோனா சோதனைக்கு உட்பட வேண்டும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

சனிக்கிழமை அன்று டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கு காலியாக சென்ற ஏர் இந்தியா விமானத்தின் விமானி ஒருவருக்கு தொற்று இருப்பது தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டது. அதை அடுத்து நடுவழியில் விமானம் திருப்பி விடப்பட்டு டெல்லி வந்து சேர்ந்தது.

டெல்லி விமான நிலையத்தில் அனைத்து ஏர் இந்தியா பணியாளர்களுக்கும் கொரோனா சோதனை முறையாக செய்யப்படுவதாகவும், சனிக்கிழமை சம்பவத்திற்கு ஒரு சிலர் கவனக் குறைவாக இருந்ததே காரணம் எனவும் ஏர் இந்தியா செயல் இயக்குநர் கேப்டன் ஆர் எஸ். சந்து விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments