வெட்டுக்கிளிகளை விரட்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும் -மகாராஷ்டிர அமைச்சர்

0 2372
வெட்டுக்கிளிகளை பட்டாசுகளை வெடித்தும், டிரம் கருவிகளை ஒலிக்க செய்தும் விரட்டும்படி விவசாயிகளுக்கு மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஆலோசனை கூறியுள்ளார்.

வெட்டுக்கிளிகளை பட்டாசுகளை வெடித்தும், டிரம் கருவிகளை ஒலிக்க செய்தும் விரட்டும்படி விவசாயிகளுக்கு மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஆலோசனை கூறியுள்ளார்.

பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாலைவன வெட்டுக்கிளிகள் (desert locust) ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பரவியுள்ளன.

மகாராஷ்டிராவில் கதோல் தொகுதியில் (Katol constituency) வெட்டுக்கிளிகளால் நேரிட்ட சேதத்தை மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் விவசாயிகளிடையே பேசிய அவர், வெட்டுக்கிளிகள் தென்பட்டதும் கிராம மக்களும், விவசாயிகளும் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, அதை விரட்டும் வகையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும், டயர்களை கொளுத்தி புகையெழுப்ப வேண்டும், அல்லது டிரம் கருவிகளை ஒலிக்க செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments