உலகளவில் கொரோனாவில் இருந்து சுமார் 27 லட்சம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 1064

உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்து சுமார் 27 லட்சம் பேர், குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

பிரேசிலில் ஒரே நாளில் 30 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கி விட்டது. ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 952 பேர், கொரோனாவால் பாதிக்கப் பட்டு உள்ளதால், மொத்த பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி, ஈரான்உள்ளிட்ட நாடுகளிலும் வைரஸ் தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.

மெக்சிகோவில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 227 பேர் பாதிக்கப்பட, அங்கு புதிதாக 371 பேரை கொரோனா காவு வாங்கி விட்டது. இதுதவிர, சவுதி அரேபியா, பாகிஸ்தான், கத்தார் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பாதிப்பு எகிறி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ள சூழலில் 3 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாகவும், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments