எல்லைப் பிரச்சினைக்கு அரசாங்க ரீதியாக தீர்வு காணப்படும் : அமித் ஷா

0 1968

சீனாவுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அரசு முறைப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியதாகவும், சீனா விவகாரத்தில் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று அமித்ஷா கூறினார்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அமித் ஷா தெரிவித்தார். லடாக்கில் சீனப்படைகள் குவிக்கப்பட்டதால் பதற்ற நிலை உருவானது. இப்பிரச்சினையில் சமரசம் செய்யத் தயார் என்று டிரம்ப் அறிவித்த போதும் அதனை இந்தியாவும் சீனாவும் நிராகரித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments