சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசுக்கு மருத்துவ குழு பரிந்துரை

0 10147
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை தலைமைச்செயலகத்தில் 5ஆவது முறையாக மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ நிபுணர் குழுவினர், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக ஊரடங்கை அமல்படுத்துவது தேவை இல்லை என்றனர்.

எனவே, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர, பிற பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளை படிப்படியாக அமல்படுத்துவது குறித்து, தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

உடலில் ஆடை அணிவது போல, வெளியே செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்ளுமாறு, மருத்துவ நிபுணர் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

சென்னை பெருநகரில் பொதுப்போக்குவரத்தை அனுமதிப்பது பெரும் ஆபத்தை விளைவித்துவிடும் என எச்சரித்த மருத்துவ நிபுணர் குழுவினர், கட்டாயம் பேருந்து மற்றும் ரயில்களை இயக்கக்கூடாது என அறிவுறுத்தினர்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் தமிழக சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் மருத்துவ நிபுணர் குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments