கொரோனா தடுப்பூசி, சிகிச்சை தங்கு தடையின்றி கிடைக்க உலக சுகாதார நிறுவனமும், 37 நாடுகளும் இணைந்து புதிய கூட்டுமுயற்சி

0 1779
கொரோனாவுக்கான தடுப்பூசி, சிகிச்சை முறையை, உலக அளவில் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்யும் நோக்கில், உலக சுகாதார நிறுவனமும், 37 நாடுகளும் இணைந்து புதிய கூட்டுமுயற்சியை தொடங்கியுள்ளன.

கொரோனாவுக்கான தடுப்பூசி, சிகிச்சை முறையை, உலக அளவில் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்யும் நோக்கில், உலக சுகாதார நிறுவனமும், 37 நாடுகளும் இணைந்து புதிய கூட்டுமுயற்சியை தொடங்கியுள்ளன.

வளர்ந்த நாடுகளில், கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சித் திட்டங்கள் பெரும் பொருட் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தடுப்பு மருந்து கண்டறியப்படும் பட்சத்தில், காப்புரிமை தொடர்பான காரணங்களால், அத்தகைய மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என சிறிய மற்றும் வளரும் நாடுகளில் அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனமும், 37 வளரும் நாடுகளும் இணைந்து C-TAP என்ற இந்த கூட்டு முயற்சியை தொடங்கியுள்ளன.

அரசுகள், நிறுவனங்கள் இதில் இணையலாம் என்றும், பொது உரிமை மற்றும் திறந்த முறையில் ஆராய்ச்சியை ஊக்குவிப்பது இதன் நோக்கம் என்றும் உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments