ஆபரணத் தங்கம் விலை மீண்டும் 36,000ஐ தாண்டியது

0 7267
ஆபரணத் தங்கம் விலை மீண்டும் 36,000ஐ தாண்டியது

ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 36 ஆயிரம் ரூபாயை மீண்டும் தாண்டியுள்ளது.

கடந்த 25ம் தேதி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 36 ஆயிரத்து 352 ரூபாயாக இருந்தது. இதையடுத்து விலை குறைந்து கடந்த 4 நாள்களாக சவரன் தங்கம் விலை 35 ஆயிரம் ரூபாய்க்கும் சிறிது அதிகமாக இருந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் சவரன் 36 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.

நேற்று ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 476 ரூபாயாக இருந்தது. இன்று அந்த விலை 32 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 508ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் நேற்று 35 ஆயிரத்து 808 ரூபாயாக இருந்த சவரன் தங்கம் இன்று 256 ரூபாய் அதிகரித்து 36 ஆயிரத்து 64 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை கிலோ நேற்று 52 ஆயிரத்து 700 ரூபாயாக இருந்த நிலையில் இன்று ஆயிரத்து 100 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 800 ரூபாயாக உள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments