100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் இடத்திலேயே ஊதியம் வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு வேண்டுகோள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 3601

நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு, கூலியை பணிபுரியும் இடத்திலேயே வழங்க வேண்டும் என வங்கிகளை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. துணை முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலர்கள், நபார்டு வங்கியின் அலுவலர்கள், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளின் அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.

விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்குவது, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வசதி, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கியின் மூலம் மானியத்துடன் கடனுதவி, நடப்பு நிதியாண்டுக்கு உத்தேசிக்கப்பட்ட ஆண்டு கடன் திட்டம் குறித்து இதில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயத்திற்கான கடனுதவியை உடனுக்குடன் வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு வங்கிகளை கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன, இவற்றின் மூலம் சுமார் 1 கோடி பேர் வேலைவாய்ப்பை பெறுகின்றனர், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், சிறு, குறு, தொழில் நிறுவனங்களின் பங்கு 30 சதவீதம் என முதலமைச்சர் குறிப்பிட்டார். எனவே, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டுகோள் விடுத்தார். மத்திய அரசு அறிவித்துள்ள 3 லட்சம் கோடி ரூபாயில், தமிழகத்தில் சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் கிடைக்கச் செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments