ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2,446ஆக அதிகரிப்பு

0 754
ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2,446ஆக அதிகரிப்பு

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 446ஆக அதிகரித்துள்ளது.

15 மண்டலங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 362ஆக அதிகரித்துள்ளது. ராயபுரம் மண்டலத்துக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 678ஆக பாதிப்பு உயர்ந்துள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 500ஆகவும், திருவிக நகர் மண்டலத்தில் ஆயிரத்து 437ஆகவும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 425ஆகவும், அண்ணாநகர் மண்டலத்தில் ஆயிரத்து 143ஆகவும் அதிகரித்துள்ளது.

15 மண்டலங்களிலும்அந்தத் தொற்றிலிருந்து இதுவரை 6 ஆயிரத்து 869 பேர் குணமாகியுள்ள நிலையில், 6 ஆயிரத்து 300 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர்த்து 109 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments