உடலில் அம்பு துளைத்த போதும் அனாயசமாகப் பறக்கும் கடல்புறா

0 1285
உடலில் அம்பு துளைத்த போதும் அனாயசமாகப் பறக்கும் கடல்புறா

இங்கிலாந்தில் சுமார் 2 அடி நீளமுள்ள அம்பினால் துளைக்கப்பட்ட கடல் புறா சர்வசாதாரணமாக உலாவிக் கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிளாக்பூல் என்ற இடத்தில் கடல் புறா ஒன்று சாலையில் உலாவிக் கொண்டிருந்தது. அந்தப் பறவையின் உடலில் சுமார் 2 அடி நீளம் கொண்ட அம்பு துளைத்திருப்பதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அதனைப் பிடிக்க முயன்றபோது, அனாயசமாகப் பறந்து சென்றது. பறவைகளை வேட்டையாடுபவர்கள் கடல் புறா மீது அம்பை எய்திருக்கலாம் என்று கூறியுள்ள பறவையியல் ஆய்வாளர்கள், படுகாயத்தின் போதும் குறிப்பிட்ட பறவை உயிர் வாழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments