இந்த ஆண்டில் அதிகம் சம்பாதிக்கும் முதல் வீரர் ரோஜர் பெடரர்

0 1757
இந்த ஆண்டில் அதிகம் சம்பாதிக்கும் முதல் வீரர் ரோஜர் பெடரர்

பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் இந்த ஆண்டில் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் இதுவரை 20கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். அவர் கடந்த 12 மாதங்களில் 106.3 மில்லியன் டாலர் அளவுக்கு சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளதாக நியூயார்க்கில் இருந்து வெளிவரும் போபர்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ 105 மில்லியன் டாலருடன் 2வது இடத்திலும், மெஸ்ஸி 104மில்லியன் டாலருடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments