அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதித்து உத்தரவு

0 2432
அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதித்து உத்தரவு

நடிகர், நடிகை, தொழில்நுட்பப் பணியாளர்கள் என அதிகபட்சமாக 60 பேரை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நாளை முதல் நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகபட்சம் 20 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை துவங்குவதற்கு கடந்த 21ஆம் தேதி அனுமதி அளித்ததை குறிப்பிட்டுள்ளார். இதை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்பப் பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நாளை முதல் நடத்த அனுமதித்து அளித்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிறமாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் ஒவ்வொரு சின்னத்திரை தொடரின் முழுப்படப்பிடிப்பிற்கும் ஒருமுறைமட்டும் முன் அனுமதிபெற வேண்டும் என முதலமைச்சர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments