கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளி அட்டகாசம்..! கலெக்டர் விளக்கம்

0 8957
கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளி அட்டகாசம்..! கலெக்டர் விளக்கம்

தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் வரவாய்ப்பில்லை என்று கூறப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி பகுதியில் புகுந்த குறிப்பிட்ட வகை வெட்டுக்கிளிகள் தாவரங்களை வேட்டையாடி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

வடக்கில் உணவுபயிர்களை அழித்துவரும் பாலைவன வெட்டுக்கிளிகள் அங்கிருந்து தமிழகத்திற்குள் வர வாய்ப்பில்லை என்று கூறப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி பகுதிக்குள் குறிப்பிட்டவகை, வெட்டுக்கிளிகள் சாலையோரம் உள்ள எருக்கஞ்செடிகளையும் மற்றத் தாவரங்களையும் சாப்பிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி பகுதிக்கு படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளின் கோரப்பசிக்கு இரையான தாவரங்களில் இலைகள் இன்றி வெறும் கிளைகளாகவே காட்சி அளிக்கின்றன.

அங்குள்ள பெரும்பாலான தாவரங்களில் தங்களுக்கு இரைகிடைத்த திருப்தியுடன் வெட்டுக்கிளிகள் கூட்டமாக அடைந்திருப்பதை காணமுடிகின்றது..இது குறித்து விளக்கம் அளித்துள்ள கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர், நேரலகிரி கிராமத்தில் காணப்படும் வெட்டு கிளிகளால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அவை எருக்கன் செடிகளில் மட்டுமே இருக்க கூடிய வெட்டு கிளிகள் என்று சுட்டிக்காட்டினார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை வேளாண்மை துறையினருடன், வெட்டுக்கிளிகள் இருக்கும் இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில்லாமல், நீண்ட காலமாக பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரிக்கு முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.

இதற்கிடையே ஊட்டியில் காணப்பட்ட வெட்டுக்கிளி குறித்து ஆய்வு பூச்சியியல் வல்லுனர்கள், இது சாதாரண வெட்டுக்கிளி என்றும் சேதத்தை ஏற்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளி அல்ல என்றும் அதனால் அச்சம் தேவையில்லை என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்...

 அதே நேரத்தில் தமிழகத்திற்குள் பாலைவன வெட்டுக்கிளிகள் வராமல் இருக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் வேண்டுதலாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments