முதலமைச்சர் எடியூரப்பா மீது 25 பாஜக எம்.எல்.ஏக்கள் அதிருப்தி?

0 3989
முதலமைச்சர் எடியூரப்பா மீது 25 பாஜக எம்.எல்.ஏக்கள் அதிருப்தி?

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி எழுப்பியுள்ள 25 பாஜக எம்.எல்.ஏக்களில் 13 பேர் நேற்று ஒன்று கூடியதால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் 13 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கலந்துக் கொண்டனர். மாநிலங்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற மேலவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என எடியூரப்பா அறிவித்துள்ளதால் அமைச்சர் பதவிக்காகவும் சில ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் முதலமைச்சருக்கு நெருக்குதல் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments