மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்-மம்தா பானர்ஜி

0 884

மேற்கு வங்கத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் திறக்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் கலந்துரையாடிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கோவில், மசூதி, குருத்துவாரா, தேவாலயம் என அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஒரு நேரத்தில் பத்து பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும், நிகழ்ச்சிகளுக்கும் விழாக்களுக்கும் அனுமதி இல்லை என்றும் அவர் அறிவித்தார். ஜூன் ஒன்றாம் தேதி முதல் தேயிலைத் தொழிற்சாலைகள், சணல் தொழிற்சாலைகள் நூறு விழுக்காடு தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் என்றும், அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் நூறு விழுக்காடு பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments