330 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் தொடக்கம்

0 665

330 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டப் பணிகளை, தலைமைச் செயலகத்தில், காணொலி காட்சி முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத் துறை சார்பில், மொத்தம் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு கட்டமைப்புகளை அவர் திறந்துவைத்தார். பல்வேறு மாவட்டங்களில் 27 பள்ளிக் கட்டடங்கள், 2 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனக் கட்டடங்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கட்டடம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

தேனிமாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் 34 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்துவைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments