புதிய உச்சம் எட்டிய கொரோனா.. கிடு ... கிடு ... வென உயரும் பாதிப்பு..!

0 4164

நாடு முழுவதும் ஒரே நாளில் அதிக பட்சமாக 7 ஆயிரத்து 465 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் தொற்று பாதிப்பு ஒரு லட்சத்து 68 ஆயிரத்தை தாண்ட, சுமார் 71 ஆயிரம் பேர், குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா, தற்போது இந்தியாவை ஆட்டிப் படைத்து வருகிறது. 

மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு, 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அம் மாநில காவலர்கள்116 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.

மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக 2- வது இடம் வகிக்கும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரமாக உயர,ஒரே நாளில் 82 பேர் பலி ஆகி உள்ளனர்.

குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 500 -ஐ தாண்டி விட்டது.

ராஜஸ்தானில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்க, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பு, 7 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

மேற்கு வங்காளம், ஆந்திரா, பீஹார், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.

இதுதவிர, ஜம்மு - காஷ்மீர், ஒடிசா, ஹரியானாவிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 500 -ஐ நெருங்கி உள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 790 பேர், கொரோனாவுக்கு இரை ஆகி விட்டனர். அதேநேரம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 414 பேர், குணம் அடைந்தனர். இதுவரை சுமார் 71 ஆயிரம் பேர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments