தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் வாரிசுகள் என உயர்நீதிமன்றம் அறிவிப்பு

0 2565

தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 920 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் அவரது சொத்துகளுக்கு இரண்டாம் நிலை சட்டபூர்வ வாரிசுகள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்து குடும்ப சட்டப்படி, தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் அல்ல, நேரடி வாரிசுகள் என நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு தீர்ப்பில் திருத்தம் செய்துள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், போயஸ் தோட்ட இல்லத்திற்குள் தீபா நுழைவது தேவையற்ற பிரச்சனையை உருவாக்கும் என்பதால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போயஸ் தோட்ட இல்லத்தை தற்போது அரசு கையகப்படுத்தியுள்ள நிலையில், அங்கு செல்ல வேண்டாம் என தீபா தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments