தனியார் நிலத்தின் கனிம வளங்கள் அரசுக்கே சொந்தம்-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

0 825

தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் இருக்கும் கனிமவளங்கள் அரசுடைமை என்றும், அவற்றின் வருவாயும் அரசுக்கே சேரும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான பொதுநல மனுவில், வாகைக்குளத்தில் பட்டா நிலத்தில் உள்ள மணலை எடுக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்ததையும், இதைப் பயன்படுத்திக் கனரக வாகனங்களைக் கொண்டு கிருதுமால் ஆற்றுப்படுகையில் மணல் எடுத்து வருவதையும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு, தனியாருக்குச் சொந்தமான நிலம் என்றாலும் அதில் இருக்கும் கனிமவளங்கள் அரசுடைமை தான் என்றும், அவற்றின் மூலம் வரும் வருவாயும் அரசுக்கே சேரும் என்றும் தெரிவித்தனர். இது குறித்துப் பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments