டிக் டாக் வீடியோவால் குடும்பத்துடன் ஒன்றுசேர்ந்த தெலுங்கானா நபர்

0 1952

பஞ்சாபை சேர்ந்த காவலர் ஒருவர் வெளியிட்ட டிக் டாக் வீடியோ மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தெலுங்கானாவை சேர்ந்த காது கேளாத, வாய்பேச முடியாத நபர் ஒருவர் குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளார்.

தெலுங்கானாவை சேர்ந்த வெங்கடேஸ்வரலு 2018ம் ஆண்டில் வேலைதேடி லாரியில் சென்றபோது வழியில் தூங்கியது உள்ளிட்ட காரணத்தால் லூதியானா சென்றார். அவருக்கு காது கேட்பதிலும், வாய் பேசுவதிலும் குறை இருப்பதால் ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டார்.

பஞ்சாபை சேர்ந்த காவலர் அஜ்ய்ப் சிங் (Ajaib Singh) என்பவர், உதவி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை எடுத்து டிக் டாக்கில் பதிவிட்டிருந்தார். அதில் வெங்கடேஸ்வரலு இருப்பதை கண்ட குடும்பத்தினர் காவல்துறையின் உதவியுடன் சிறப்பு அனுமதி பெற்று லூதியானா சென்று திரும்ப அழைத்து வந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments