14,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ”ரெனால்ட்” முடிவு

0 5253

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், 14,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தால் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால், செலவீனங்களை கட்டுப்படுத்த, ரெனால்ட் நிறுவனம் 20 சதவீத உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், சக கார் தயாரிப்பு நிறுவனங்களான Nissan மற்றும் Mitsubishi உடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில், 3 நிறுவனங்களும், உலக சந்தையில் வாகன விற்பனையை பிரித்து கொள்ள முடிவு செய்துள்ளன.

அதன் அடிப்படையில், வட அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பானில் Nissan நிறுவனமும், ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் ரெனால்ட் நிறுவனமும், தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் Mitsubishi நிறுவனமும் சந்தையை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments