கொரோனா வார்டாக மாறிய குடிசை மாற்று வாரிய குடியிருப்பு

0 1151

சென்னை - பேசின்பிரிட்ஜ் அருகே கே.பி பார்க் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்த அடுக்கு மாடி குடியிருப்பு, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக, 824 வீடுகளில் ஆயிரத்து 728 படுக் கைகள் தயார் செய்யப்பட்டு இருக்கிறது.தனித்தனி கழிவறை, மின் விசிறி,ஒலி பெருக்கி மற்றும் தொலைபேசி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கொரோ னா நோயாளிகளை கண்காணிக்க சிசிடிவி காமிராவும் பொருத்தப்பட்டு உள்ளது.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த பணிகளை, ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், குறைவான அறிகுறியுடன் இருப்போர் இங்கு தங்க வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments