டெல்லி, மும்பை நகரங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள்

0 13082

டெல்லி, மும்பை நகரங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு 8  சிறப்பு விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

டெல்லியில் இருந்து ஜூன் நான்காம் தேதி ஆக்லாந்துக்கும், ஜூன் ஐந்தாம் தேதி சிகாகோ, ஸ்டாக்கோம் நகரங்களுக்கும் விமானங்களை இயக்குகிறது. ஜூன் ஆறாம் தேதி நியூயார்க், பிராங்க்பர்ட், சியோல் நகரங்களுக்கும் விமானங்களை இயக்க உள்ளது.

மும்பையில் இருந்து ஜூன் ஆறாம் தேதி லண்டனுக்கும், நியூ ஆர்க்குக்கும் விமானங்களை இயக்குகிறது. இந்த விமானங்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு சனிக்கிழமை பகல் 11 மணிக்குத் தொடங்குகிறது. ஏர் இந்தியா இணையத்தளத்திலும் அலுவலகங்களிலும் பயணச்சீட்டுகளை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments