பொதுமக்களுக்கான பணியில் ஈடுபடுத்தப்பட்ட சினூக் வகை ஹெலிகாப்டர்

0 793

இந்திய விமானப் படையின் சினூக் வகை ஹெலிகாப்டர் அருணாசலப் பிரதேசத்தில் இன்றியமையாப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப் படைக்காக CH-47F வகை ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை அதிக எடையை ஏற்றிக் கொண்டு அதிக உயரமான பகுதிகளுக்குச் செல்லும் திறன்படைத்தவை. அருணாசலப் பிரதேசத்தில் மக்களுக்கு இன்றியமையாப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பணியில் இந்த ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மியாவோவில் உள்ள விமானப்படைத் தளத்தில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர், வாகனங்களால் எளிதில் செல்ல முடியாத மலைப்பகுதிகளுக்குக் கொண்டு சென்று பொருட்களை வழங்கியது. இது குறித்த வீடியோவை அருணாசலப் பிரதேச முதலமைச்சர் பேமா காண்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments