டிரோன் மூலம் பொருட்களை டெலிவரி செய்ய ஸ்பைஸ்எக்ஸ்பிரஸ் திட்டம்

0 944

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் சரக்குப் பிரிவான ஸ்பைஸ்எக்ஸ்பிரஸ் நிறுவனம், சோதனை அடிப்படையில் டிரோன் மூலம் பொருட்களை டெலிவரி செய்வதற்கு விமானப் போக்குவரத்து இயக்குனரகத்திடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.

டிரோன் தயாரிப்பு நிறுவமான திரோட்டில் ஏரோஸ்பேஸ் மற்றும் சாப்ட்வேர் சேவை வழங்கி வரும் ஏயோலாஜிக் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை விரைவாக, குறைந்த செலவில் டிரோன் மூலம் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளதாக ஸ்பைஸ்எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக போக்குவரத்து வசதிகள் இல்லா இடங்களில் இந்த டிரோன் சேவையை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. வான்போக்குவரத்தில் டிரோன் சேவை புதிய மைல்கல்லாக இருக்கும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments