மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் 116 போலீசாருக்கு கொரோனா

0 837

மகாராஷ்டிராவில் மேலும் 116 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதித்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அந்த மாநிலத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 116 போலீசாருக்கு மருத்துவ பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 211ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு மேலும் 3 போலீசார்   பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்த போலீசாரின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments