பொன்மகள் வந்தாள் படத்தை சட்டவிரோதமாக வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

0 23877

அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆன இன்றே தமிழ் ராக்கர்ஸ் (Tamil rockers) இணையதளத்திலும் சட்டவிரோதமாக பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளியாகியிருப்பது சினிமா உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஓடிடி வெளியீட்டுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எழுந்த பிரச்னைக்கு மத்தியில் அந்த படம் இன்று அமேசான் பிரைமில்  ரிலீஸ் செய்யப்பட்டது. அவ்வாறு ரிலீஸ் ஆன சில நிமிடங்களில் அதே ஹெச்.டி தரத்தில்  தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும் சட்டவிரோதமாக வெளியானது.

திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் ஆகும் அதே நாளில் தமிழ்ராக்கர்ஸ்  தளத்தில் திரைப்படங்கள் வெளியாகும்.   இந்நிலையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான படத்தையும் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments