ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?முடிவுக்கு வருமா?பிரதமர் மோடி-அமித் ஷா முக்கிய ஆலோசனை

0 2960

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, முடிவுக்கு வருமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

நாடு முழுவதும் 4ஆம் கட்ட ஊரடங்கு, வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து, மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர்களை தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.

தற்போதைய ஊரடங்கு குறித்த கருத்துகள், மே 31ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்த ஆலோசனைகள், கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து முதலமைச்சர்களிடம் அமித்ஷா கேட்டறிந்துள்ளார். இந்த ஆலோசனைக்குப் பிறகு, ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறியிருந்தார்.

இந்நிலையில், அமித்ஷா பிரதமர் மோடியை இன்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவது குறித்தும், ஊரடங்கு மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்தும் இருவரும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments