பாகிஸ்தான்:விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள பணம் கண்டுபிடிப்பு

0 4130

பாகிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 22 ஆம் தேதி லாகூரில் இருந்து சென்ற விமானம் கராச்சியில் தரையிறங்குவதற்கு முன்பு குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள் உள்பட 97 பேர் மரணமடைந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள நிலையில், 2 பேர் மட்டும் உயிர் பிழைத்தனர்.

விமானத்தின் இடிபாடுகளில் இருந்து உடைமைகளை எடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வரும் நிலையில், 2 பைகளில் இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு நாடுகளின் கரன்சி நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், பணம் யாருடையது என்றும் விமானநிலையை பரிசோதனைகளை மீறி இவ்வளவு பெரிய தொகை எப்படி விமானத்தில் எடுத்து வரப்பட்டது என்றும் விசாரணை நடந்து வருவதாக குறிப்பிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments