உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் ..?

0 2955
உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் ..?

ஆசிய கண்டத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளான துருக்கி, இந்தியா ஆகியவை நேற்று வரை 9 மற்றும் 10ஆவது இடங்களில் இருந்தன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மேலும் 7 ஆயிரத்துக்கும் மேல் பதிவானதால், மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டியது.

இதனால் அப்பட்டியலில் இந்தியா 9ஆவது இடத்துக்கு முன்னேறியது. அதேநேரத்தில் அந்த பட்டியலில் , 1 லட்சத்து 60 ஆயிரத்துடன் 10ஆவது இடத்துக்கு துருக்கி நாடு பின்தள்ளப்பட்டது. இதனால் ஆசிய நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அந்த பட்டியலில் ஆசிய நாடுகளான ஈரான் 11ஆவது இடத்திலும், சீனா 15ஆவது இடத்திலும் உள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments