விவசாயத்தை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணி தீவிரம்

0 915
விவசாயத்தை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணி தீவிரம்

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஜான்சியில் பல்லாயிரக்கணக்கில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் அங்கு பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள், பருப்பு பயிர்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், மருந்து தெளித்து வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இரவு நேரத்தில் வெட்டுக்கிளிகள் ஓய்வெடுக்கும் போது மருந்து தெளித்து அவைகள் அழிக்கப்படுகின்றன. பகல் நேரங்களில் விவசாய நிலத்தை விட்டு வெட்டுக்கிளிகளை விரட்ட அதிக சப்தம் எழுப்பும்படி விவசாயிகளை வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments