புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வரி மீண்டும் உயர்வு

0 906
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வரி மீண்டும் உயர்வு

புதுச்சேரி அரசால் பெட்ரோல், டீசல் மீதான வரி மீண்டும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி திரட்டும் வகையில், பெட்ரோல் டீசல் மீது கூடுதலாக 1 சதவீத வரியை கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி அரசு உயர்த்தியது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்தது.

இந்நிலையில் இன்று முதல் பெட்ரோல் மீதான வரியை மேலும் சுமார் 5 சதவீதமும், டீசல் மீதான வரியை சுமார் 3 சதவீதமும் மாநில அரசு உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 22 காசுகள் உயர்ந்து, 72 ரூபாய் 69 காசுகளாக உள்ளது. இதேபோல் டீசல் விலையும் 2 ரூபாய் ஒரு காசு ((2.01)) அதிகரித்து 67 ரூபாய் 15 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments