சமூக ஊடகங்களை வரைமுறைப்படுத்த டிரம்ப் அதிரடி நடவடிக்கை

0 857
சமூக ஊடகங்களை வரைமுறைப்படுத்த டிரம்ப் அதிரடி நடவடிக்கை

டிவிட்டர் நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதலையடுத்து சமூக ஊடகங்களை வரைமுறைப்படுத்தும் புதிய சட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இதன் மூலம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு கிடைக்கும் . கையெழுத்திட்ட பின்னர் தமது அலுவலகத்தில் இருந்து உரையாடிய டிரம்ப், அமெரிக்காவின் சுதந்திரமான பேச்சுக்கு உள்ள ஆபத்துகளை நீக்கவே இந்த உத்தரவு என்று விளக்கம் அளித்தார்.

அதிபர் டிரம்ப்பின் இரண்டு பதிவுகளை தவறானவை என்று ட்விட்டர் முத்திரை குத்தியதையடுத்து டிரம்ப் அரசுக்கும் டிவிட்டர் நிறுவனத்துக்கும் இடையே மோதல் உருவானது. தமது பதிவுகள் தவறாக வழிகாட்டுபவை எனக்கூறிய டிவிட்டர் நிறுவனம் மீது வழக்குத் தொடரப் போவதாகவும் டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும் சமூக ஊடகங்களுக்கு அளித்துவரும் விளம்பரங்களை குறைக்குமாறும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments