தமிழகம் முழுவதும் இடி,மின்னலுடன் கனமழை

0 1790
தமிழகம் முழுவதும் இடி,மின்னலுடன் கனமழை

நெல்லையில் சூறைக்காற்று வீசிய நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது

ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.கடந்த சில நாட்களாக வெயிலால் வாடி வதங்கிய மக்கள் குளுமையான சூழலை அனுபவித்தனர்.

 

பழனியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ரயில்நிலைய சாலை, பேருந்துநிலையம் , காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது .நெல்லை மாவட்டத்தில் இடி மின்னல் சூறைகாற்றுடன் பெய்த கனமழைக்கு தற்காலிக கடைகளின் கூரைகள் பறந்தன. பல இடங்களில் மரங்கள் கீழே விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

 

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சங்ககிரி பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.அவிநாசி, சேலம், திருவண்ணாமலை, காரியாப்பட்டி ,கோவை,வேடச்சந்தூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் தமிழகம், தென்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடுமென சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments