புல்வாமாவில் மீண்டும் முறியடிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் சதித் திட்டம்

0 909
புல்வாமாவில் மீண்டும் முறியடிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் சதித் திட்டம்

ஜம்மு-காஷ்மீரில் கார்குண்டு மூலம் சிஆர்பிஎப் வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் தீட்டியிருந்த சதித் திட்டத்தை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.

புல்வாமாவில் கடந்த ஆண்டு நடத்தப்பட்டதைப் போல தாக்குதல் திட்டத்துடன் வெடிகுண்டுகளுடன் காரில் பயங்கரவாதி ஒருவன் சுற்றுவதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் ராஜ்போரா (Rajpora) பகுதியில் வாகன சோதனையில் கார் நிற்காமல் சென்றதால் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். காரை வேகமாக ஓட்டிச் சென்ற பயங்கரவாதி, அதை வேறு இடத்தில் நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டான். காரில் இருந்த வெடிகுண்டுகளை தகுந்த பாதுகாப்புடன் வெடிகுண்டு நிபுணர்கள் வெடிக்கச் செய்தனர்.

காரை ஓட்டி வந்த பயங்கரவாதி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவன் என அடையாளம் காணப்பட்டுள்ளான். காரில் 60 கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகள் இருந்ததாகவும், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகிய அமைப்புகள் கூட்டாக சதித்திட்டத்தை தீட்டியிருக்கலாம் எனவும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீநகரில் இருந்து 400 வீரர்களுடன் 20 சிஆர்பிஎப் வாகனங்கள் நேற்று புறப்பட இருந்த நிலையில் சதித்திட்டம் உரிய நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments