கொரோனா நோய்த் தொற்று 20 அடி வரை பாயும் -புதிய ஆய்வு

0 6043
கொரோனா நோய்த் தொற்று 20 அடி வரை பாயும் -புதிய ஆய்வு

கொரோனா வைரஸ் 6 அடி தூரம் வரைதான் பரவும் என்று கூறப்பட்டதை பொய்யாக்கும் விதமாக கொரோனா தொற்று 20 அடி தூரம் வரை பரவும் என்று அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

வரும் குளிர்காலத்தில் இந்தியாவில் மும்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இருமல், சளி, எச்சில் துப்புதல் போன்றவற்றால் கொரோனா வைரஸ் மற்றவர்களுக்குப் பரவுகிறது.

பேசுவதன் மூலமாகவும் தெறிக்கும் துளிகளில் கொரோனா பரவுகிறது. இதன் மூலம் தொற்று உடைய 40 ஆயிரம் துளிகள் வெளியேறுகின்றன. புவி ஈர்ப்பு சக்தியால் பெரும்பாலும் இவை நிலத்தில் உதிர்ந்து விடுகின்றன. எனினும் சில துளிகள் காற்றில் மிதந்தபடி பல மணி நேரம் நீடிக்கின்றன.இவற்றால் ஆறடி வரைதான் பாதிப்பு என கடந்த கால ஆய்வுகள் தெரிவித்த நிலையில் 20 அடி தூரம் வரை நோய் நுண்தொற்று பரவக்கூடும் என்று புதிய ஆய்வுகள் எச்சரித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments