பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது - UGC

0 12510
பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது

பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது என்று UGC எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 127 நிகர்நிலை கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்வி நிறுவன பெயருக்கு பின்னால் பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று கடந்த 2017 நவம்பரில் UGC தடை விதித்தது.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி, UGC விதித்துள்ள தடையை மீறி பல்வேறு நிகர்நிலைக் கல்வி நிறுவனங்கள் தங்கள் இணையதளத்திலும், விளம்பரத்திலும், லெட்டர் பேடிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்று குறிப்பிட்டுள்ளதாக புகார்கள் வந்ததை அடுத்து, பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நீக்கத் தவறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று UGC எச்சரிக்கை விடுத்துள்ளது.

இனிவரும் நாட்களில் நிகர்நிலை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனம் என்று தான் குறிப்பிட வேண்டும் என்றும் UGC உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments