மரவள்ளி பயிர் பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.54 லட்சம் ஒதுக்கீடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

0 2482
மரவள்ளி பயிர் பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.54 லட்சம் ஒதுக்கீடு

நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், மாவுப்பூச்சி தாக்குதலில் இருந்து மரவள்ளி பயிர்ப் பாதுகாப்புப் பணிகளுக்காக 54 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 3 ஆயிரத்து 112 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி பயிரில், மாவுப்பூச்சியின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மரவள்ளியில் மாவுப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக, நடவு முடிந்த இரண்டாவது மாதத்தில் அசாடிராக்டின் மருந்தினையும், இரண்டாம் முறையாக, புரோபினோபாஸ் அல்லது தயோமீதாக்சேம் மருந்தினையும் தெளிப்பதற்காக, ஹெக்டேருக்கு ஆயிரத்து 750 ரூபாய் வீதம் 3, ஆயிரத்து 112 ஹெக்டேரில் பயிர்ப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள 54 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் நிதியினை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments